மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக நவீன் ராம்கூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ்  ஆகும். இந்த நாட்டில் நவம்பர் 10  அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக 70 உறுப்பினர்களில் 62 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு நிறைவுபெற்றபின், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வி அடைந்தது.

பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சி (பிடி’ஆர்)   மற்றும் மொரிஷியன் ஆயுதப்படை இயக்கம் (எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகள்  ஆகியவற்றின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.