9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம்!
உலகளாவிய விற்பனை சரிவுகளுக்கு மத்தியில், ஜப்பானிய கார் தயாரிப்பாளரான நிசான் (Nissan) மோட்டார் நிறுவனம் சுமார் 9,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் என்ற அறிவிப்பை செய்துள்ளது.
அதுடன், நிசான் நிறுவனம் தனது உளளாவிய வாகன உற்பத்தி அளவைக் 20 சதவீதம் குறைப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவை குறைப்பதற்கான அவசர முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன.
சீனா மற்றும் அமெரிக்காவில் விற்பனையில் சரிவுகள் மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக, நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், நிசான் தனது உற்பத்தி ஆலயங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது. குறிப்பாக, வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுந்தர்லேண்ட் உற்பத்தி நிலையத்தில் 6,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
அதிக வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் சீனாவில் உள்ள அதிக போட்டிகளுடன் தொடர்புடைய விலை வீழ்ச்சிகளால், நிசான் மற்ற கார் தயாரிப்பாளர்களுடன் போட்டி செய்யக் கஷ்டப்படுவதாகவும் பிபிசி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
நிசான் பங்குகள், வெள்ளிக்கிழமை (08) காலை டோக்கியோ விளக்கத்தில் 6% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது.