கியூபாவில் நிலநடுக்கம்
கியூபாவின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் கியூபாவின் பார்டோலோம் மாசோவின் கடற்கரையருகே, 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இதுவரை, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.