ரஷ்ய இராணுவத்தில் யாழ் இளைஞர்கள் கட்டாயமாக சேர்க்கப்படவில்லை – ரஷ்ய தூதரகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்கள் இலங்கை-ரஸ்யா நட்புறவை சீர்குலைப்பதற்கான முயற்சியாகும் என்று தூதரகம் வலியுறுத்தியது.

நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பான புகார்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றதும், இலங்கை அரசாங்கத்தின் உதவிக்கோரிக்கைக்கு ரஸ்யா உடனடியாக ஆதரவு வழங்கும் என்றும் தூதரகம் உறுதியளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.