கனேடியப் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு
ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
53 வயதான ட்ரூடோ இன்று திங்கட்கிழமை ஒட்டாவில் இல்லத்திற்கு வெளியே நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
நான் பணியாற்றும் நாடாளுமன்றம் தனது தலையின் கீழ் முடங்கிவிட்டதாகக் கூறினார்.
எனது விடுமுறை நாட்கள் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து. அத்துடன் எனது குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசினேன் எனத் தெரிவித்தார்.
நாடு தழுவிய வலுவான போட்டி மூலம் தனது கட்சி ஒரு வலுவான தலைவரைத் தேர்ந்தெடுத்த பின்னர் கட்சித் தலைவர் பதவிலிருந்தும் பிரதமர் பதவிலிருந்து பதவி விலக விரும்புகிறேன் என்று தெளிவுபடுத்தினார்.
இன்று திங்கட்கிழமை காலை கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமனுடன் பேசியதாகவும், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொண்டதாக வெளியான செய்திகளையும் அவர் உறுதிப்படுத்தினார்.