பூமியை நோக்கி வருகிறது ஆபத்தான சிறுகோள், பயம் வேண்டாமென நாசா தகவல்!
890 அடி விட்டம் கொண்ட ஆபத்தான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சிறுகோளுக்கு 2008 OS7 என பெயரிடப்பட்டுள்ளதுடன், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு பூமியயை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்பதனால் , இது குறித்து கவலைப்பட தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்ட 2,350 சிறுகோள்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.