கனடா பிரதமரை கல்லால் தாக்கியவர் கைது!
கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லண்டன் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கல்லால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆறு மணி அளவில் தேர்தல் பிரச்சாரத்தினை முடித்துவிட்டு வாகனத்திற்குள் ஏற முற்பட்ட போது பிரதமர் மீது குறித்த நபர் கல்லினால் எறிந்துள்ளார்.
எனினும் கனடா பிரதமர் எவ்வித காயங்களும் இன்று தப்பித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து இருந்த நிலையில் இருபத்தி ஆறு வயதுடைய ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.