கோரிக்கைகள் நிறைவேறாத வரை பணய கைதிகளை விடோம் – ஹமாஸ் எச்சரிக்கை
தெற்கு காசாவின் முக்கிய பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் கடும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றாத வரைக் எந்தவொரு பிணைய கைதிகளையும் விடமாட்டோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத குழு உடனடியாக சரணடைய வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்திருந்தார்.
இது குறித்து அவர் விடுத்த செய்தியில்
‘இது ஹமாசின் முடிவின் ஆரம்பம்’ நான் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சொல்கிறேன். சின்வாருக்காக சாகாதீர்கள். இப்போதே சரணடையுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கு் வகையில் ஹமாஸ் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் இருவருக்கிடையில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேலிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தொடங்கியதால் பிணைக் கைதிகளை விடுவிக்கும் போர் நிறுத்தம் மீறப்பட்டது.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே தொடர்ந்து 66வது நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த போரில் காசாவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.