ஒலிம்பிக் பாதுகாப்பு பயிற்சிகளில் 18 ஆயிரம் பிரெஞ்சு படையினர்
எதிர்வரும் 26ம் திகதி பாரிசில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு நடைவடிக்கைகளுக்காக காவல்துறையினரும் படையினரும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 18 ஆயிரம் பிரெஞ்சு இராணுவத்தினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பைகளில் குத்துதல், தடியடி, உதைத்தல், கைமுட்டி தள்ளுதல் போலித் துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்கும் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு, பாரிஸில் ரோந்து சென்ற பிரெஞ்சு ராணுவ வீரரை ஒருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தினார்.
கிழக்கு பாரிஸில் உள்ள Gare de l’Est ரயில் நிலையத்திற்கு வெளியே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.