பாகிஸ்தானில் கடுமையான காற்று மாசு நிலைமை!

வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், குறிப்பாக லாகூரில், காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது, அங்கு காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டியுள்ளது. இதன் விளைவாக நகரம் முழுவதும் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளது.

மாநில அரசும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, நவம்பர் 17ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், பல முக்கிய நகரங்களில் கட்டாயமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசுபட்ட காற்றின் காரணமாக பொதுமக்கள் தமது சுவாசப் பாதைகளில் தொண்டை வலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம்களுக்கு மேல் உள்ள நுண் துகள்கள் அபாயகரமானது எனக் கருதப்படும். ஆனால், பாகிஸ்தானின் பல நகரங்களில் காற்றில் 947 மைக்ரோகிராம் அளவிற்கு நுண்துகள்கள் காணப்படுகிறது, இது WHO அளவுக்கான தரத்தை விட 189 மடங்கு அதிகமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.