இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 10 வீதமாக அதிகரிப்பு !

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 2023-2024 கல்வியாண்டில் 10% உயர்வடைந்துள்ளது. இது இரு நாடுகளுக்கிடையேயான கல்வி உறவுகளை வலுப்படுத்தும் நற்செய்தியாகவும் உலகத் தரமான கல்வியை தேடும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கையில் தெளிவான முன்னேற்றமாகவும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான Open Doors Report on International Educational Exchange அறிக்கையின் மூலம் இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்களின் அதிகரிப்பு, வலுவான மக்கள் தொடர்பு மற்றும் சர்வதேச கல்வியின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வி மற்றும் வாழ்க்கை முழுவதற்கான வலுவான வாய்ப்புகளை வழங்குகின்றன.

EducationUSA திட்டம் மூலம் இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இலங்கை மாணவர்கள் பெற முடியும்.

இந்த வளர்ச்சி அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையேயான கல்வி உறவை மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால பங்களிப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய அடிப்படையாகவும் அமைகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.