தாயும் 16 மாத குழந்தையும் சடலமாக மீட்பு!!
ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம் தாயாரும் பச்சிளம் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 53 வயதுடைய நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹின்ரன் பகுதி பொலிசார் வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் 24 வயதான தாயாரும் பிறந்து 16 மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த தாயாரும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதை வெள்ளிக்கிழமை பொலிசார் உறுதி செய்தனர்.
இந்த நிலையிலேயே 53 வயதான நபரை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதா அல்லது அந்த தாயாரும் குழந்தையும் அவருக்கு அறிமுகமானவர்களா என்பது தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட மறுத்துள்ளனர்