ஆறு இஸ்ரேலிய கைதிகள் சடலமாக மீட்பு
பிணைக் கைதிகளாக ஹமாஸ் போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளில் ஆறு போின் உடல்களை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது என இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது.
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கை கூறுகிறது.
சிறைபிடிக்கப்பட்டவர்கள் அலெக்ஸ் டான்சிக் (வயது75), யாகேவ் புச்ஷ்டவ் (வயது35) , சாய்ம் பெரி (வயது79), யோரம் மெட்ஜெர் (வயது80), நடவ் பாப்பிள்வெல் (வயது51), மற்றும் அவ்ரஹாம் முண்டர் (வயது78) என பெயரிடப்பட்டுள்ளனர்.
இராணுவம் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்பான ஷின் பெட் இணைந்து இந்த இரவு நேர நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணும் நடைமுறையின் பின்னர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இராணுவம் மேலும் கூறியது.